2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

7 மாணவர்களுக்கு சைக்கிள்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 20 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.தபேந்திரன்


யாழ். கைதடி மக்கள் நலன்புரி நட்புறவுக் கழகத்தின் டென்மார்க் ஒன்றியத்தினால், கைதடிப் பிரதேசத்தைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 7 மாணவர்களுக்கு சைக்கிள்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) வழங்கப்பட்டன.

கைதடி மக்கள் நலன்புரி நட்புறவுக் கழகத் தலைவர் இ.கந்தசாமி தலைமையில் கைதடி வளர்மதி சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற  இந்த நிகழ்வில் இவர்களுக்கு சைக்கிள்கள்; வழங்கப்பட்டன.

இதற்கான மாணவர்கள் கைதடியிலுள்ள 7 சனசமூக நிலையங்களிலிருந்தும் தலா ஒருவர் படி தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது,  கைதடியைச் சேர்ந்த 5 புற்றுநோயாளர்களுக்கு மாதாந்தம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான திட்டமும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் டென்மார் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், கைதடிப் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .