2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

81 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

Menaka Mookandi   / 2014 நவம்பர் 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டு கார் ஒன்றில் கொழும்புக்கு கொண்டு கடத்தப்படவிருந்ததாக சொல்லப்பட்ட 81 கிலோகிராம் கேரளா கஞ்சாப் பொதிகளுடன் சந்தேகநபர்களை இருவரை இளவாலை பகுதியில் வைத்து சனிக்கிழமை (15) இரவு கைது செய்ததாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'மாதகல் துறைமுகம் ஊடாக இந்தியாவிலிருந்து கஞ்சாவை கடத்தி, அவற்றை கொழும்புக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையொன்றில் குழுவொன்று ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது' என்றார். 

'இந்த குழுவினரை கைது செய்வதற்காக, வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் வழிகாட்டலில், இளவாலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி  டி.கே.எஸ்.ஏ.றோஹண தலைமையில் பொலிஸ் அணியொன்று நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்நிலையில், கார் ஒன்றில் கஞ்சா பொதிகளை கடத்தி சென்ற நல்லூர் மற்றும் கல்வியங்காடு பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 35 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன், அவர்கள் பயணித்த காரிலிருந்து 1 கோடியே 2 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கேரளா கஞ்சா பொதிகளும் கைப்பற்றப்பட்டன என்று அவ்வதிகாரி கூறினார்.

சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, இந்தியாவிலிருந்து படகு ஒன்றின் மூலம் யாழ்ப்பாணத்துக்கு இந்த கஞ்சா கொண்டுவரப்பட்டதாகவும் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதன் மூலம் இவற்றை கொழும்புக்கு கொண்டுசெல்ல முயன்றதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .