2025 ஜூலை 09, புதன்கிழமை

பொலிஸாரை ஏசியவர்களுக்கு தண்டம்

George   / 2014 செப்டெம்பர் 01 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள மதுபானசாலையொன்றின் முன்பாக நின்று பொலிஸாரை தகாத வார்த்தைகளால் ஏசிய மூவருக்கும் தலா 2500 ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று திங்கட்கிழமை (01) உத்தரவிட்டார்.

மதுபானசாலையின் முன்பாக நின்று மேற்படி மூவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு சண்டையிட்டுள்ளனர்.

இதனைத் தடுக்கச் சென்ற பொலிஸாரை தகாத வார்த்தையால் மேற்படி நபர்கள் ஏசியுள்ளனர்.

இதனையடுத்து, மூவரையும் கைது செய்த பொலிஸார், மூவருக்கும் எதிராக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

மேற்படி வழக்கு திங்கட்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .