2025 மே 17, சனிக்கிழமை

"இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்காவிடின் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்"

Menaka Mookandi   / 2012 மார்ச் 27 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், கவிசுகி, எஸ்.தில்லைநாதன்)


'எமது கடற்பிரதேச்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிமுறையினால் எமது கடல்வளம் பாதிக்கப்படுவதோடு எமது மீனவர்களின் சொத்துக்களும் அழிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் முடிவெடுக்கத் தவறினால் மாகாண ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்' என்று யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் நவரத்தினம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற ஆர்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

'நாட்டில் நடைபெற்ற யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்து எமது மக்கள் தற்போது நிம்மதியான முறையில் தொழிலை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

இப்படியான இந்த சூழலில் இந்திய மினவர்கள் இழுவைப் படகுகள் மூலம் எமது கடற்பகுதயில் தொழிலில் ஈடுபட்டு எங்கள் வளங்களை அழிப்பது மட்டுமன்றி எமது மீனவர்களின் சொத்துக்களையும் அழித்து வருகின்றார்கள்.

இதனால் நாள்தோறும் கோடிக்கணக்கான சொத்தழிவுகளை எங்கள் மீனவர்கள் சந்தித்து வருகின்றார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக பல மட்டங்களில் பல்வேறு இடங்களிலும் பேச்சுக்கள் நடத்திய போதும் எந்தவிதமான தீர்வும் எமது மீனவர்களுக்கு கிடைக்கவில்லை.

இன்று பிரதேச ரீதியாக வடமராட்சி கடற் தொழிலாளர்கள் தங்கள் எதிர்பைக் காட்டியிருக்கின்றார்கள். இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் இனிவரும் காலங்களில் மாவட்ட ரீதியாகவும், மாகாண ரீதியாகவும் எதிர்ப்பு ஆர்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்படும்' என்று அவர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .