2025 மே 02, வெள்ளிக்கிழமை

அகழ்வுப் பணி தடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

Princiya Dixci   / 2021 மார்ச் 29 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜித்தா

நிலாவரையில், இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகளைத் தடுத்து நிறுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ், இன்று (29), அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமையவே, அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே ஜனவரி மாத இறுயிலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்றும், நிலாவரையில் சந்தேகத்துக்கிடமான வகையில், இராணுவத்துடன் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வுப் பணிகளில் ஈடுபட முயற்சித்தனர். 

இதன்போது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளார் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோரால் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பாக, அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளால் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X