2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அக்கராயனில் வரட்சி நிவாரணத்துக்கு சிரமதானம்

நடராசா கிருஸ்ணகுமார்   / 2018 ஜூலை 12 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - அக்கராயனில், வரட்சி நிவாரணத்துக்கான சிரமதானப் பணிகளில், அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய, அக்கராயன் பிரதேச வைத்தியசாலை, அக்கராயன் மகா வித்தியாலயம் உள்ளிட்ட பொது இடங்களில், இந்தச் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சில காணிகளில் மக்கள் குடியேறாததன் காரணமாக, காட்டு விலங்குகளின் உறைவிடமாக, அக்காணிகள் மாறியுள்ளன. இவ்வாறான சிரமதானப் பணிகள் மூலம், மக்களதும் மாணவர்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளதென, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மக்கள் குடியேறாத காணிகளைத் துப்புரவு செய்யுமாறு, அக்கராயன் கிராம அலுவலர், தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .