2025 மே 17, சனிக்கிழமை

அடிக்கல் நாட்டி வைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - செம்மணி வீதியில், “நல்லூர் வரவேற்கின்றது” எனும் வளைவுக்கான அடிக்கல் இன்று காலை நாட்டப்பட்டது.

ஏ9 பிரதான வீதியை இணைக்கும் செம்மணி வீதியில், 6 மில்லியன் ரூபாய் நிதியில் நல்லூர் வரவேற்கின்றது வளைவு நிர்மாணிக்கப்படவுள்ளது. அடிக்கல்லை கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  நாட்டி வைத்தார்.

குறித்த வளைவில், நல்லூர் கோவிலை அடையாளப்படுத்தும் சிற்பங்களும் வடிவமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவல் ஆர்னோல்ட், ஆணையாளர் த.ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .