2025 மே 20, செவ்வாய்க்கிழமை

’அதிகளவான நிதியை அரசாங்கம் ஒதுக்க வேண்டும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

போரால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்களில் மீள்கட்டுமாணங்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லையெனக் குற்றஞ்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, அதிகளவான நிதியை அரசாங்கம் ஒதுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண ஓய்வூதியர் தின நிகழ்வு, யாழ்ப்பாணம்  விரசிங்கம் மண்டபத்தில் இன்று (08) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்துரையாற்றிய அவர், ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தாங்கள் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை,  போரால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லையெனக் குற்றஞ்சாட்டிய அவர், அதனால் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் இருப்பதாகவும் கூறினார்.

இது தொடர்பில் தாங்கள் பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்திருப்பதாகக் குறிப்பிட்டதுடன், இதனை அரசாங்கம் கவனத்திலெடுத்து, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அதிகளவிலான நிதியை ஒதுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, பொரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், மீள்கட்டுமாணங்கள் மிக மிக அவசியமானதெனத் தெரிவித்த அவர், அத்தகைய மீள்கட்டுமாணங்களுக்கு தற்போது நிதி இல்லையெனவும் குற்றஞ்சாட்டினார்.

ஆகவே, இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X