2025 மே 17, சனிக்கிழமை

‘அந்நிய செலாவணியில் 40%வை தமிழர்களுடையது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

நாட்டுக்குக் கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானத்தில், 40 சதவீதம் தமிழர்களால் கிடைக்கப்பெறுகிறதென, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

வவுனியாவில், நேற்று (17) நடைபெற்ற சிக்கனக் கடனுதவுக் கூட்டுறவுச் சங்கத்தின் சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கூட்டுறவுக்குப் பின்னால் இருக்கும் மாபெரும் சக்தி பெண்களின் சக்தியாகவே இருக்குமெனவும் எனவே இந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்தும் இணைந்து வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி என்ற தாய்வங்கியொன்றை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் பிரதான வருமானமாக தற்போது அமைந்திருப்பது, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் அங்கு உழைத்து அனுப்பும் அந்நிய செலாவணி பணமேயெனத் தெரிவித்த அவர், அது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறதெனவும் அந்தத் தொகையில் 40 சதவீதமானது தமிழர்கள் அனுப்பிவைக்கும் பணமாக இருக்கிறதெனவும் கூறினார்.

இந்தத் தொகையில் 1 சதவீதத்தையாவது தமது வங்கி மூலம் பராமரிக்க முடியுமாக இருந்தால், அதை தேசிய அளவிலான வங்கியாக மாறக்கூடிய வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பாக மத்திய வங்கி ஆளுநருடன் கதைத்து வருவதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .