Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வடக்கு மாகாண சபையை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்ட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனின் செயற்பாட்டுக்கு, மாகாண சபை அமர்வில் கண்டனம் வெளியிடப்பட்டது.
மாகாணசபையின் 130ஆவது அமர்வு, கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போதே, அவைத் தலைவர் சிவஞானம் அனந்தி சசிதரனின் கருத்தைக் கண்டித்ததுடன், அவரது செயற்பாடு சபையின் சிறப்புரிமையை மீறுகின்ற செயலென்றும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் தொடர்ந்துக் கருத்ரைத்த சிவஞானம், அண்மையில், வெடுக்குநாறி மலைக்குச் சென்ற அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபையையும் அதன் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தமை குறித்து உறுப்பினர் லிங்கநாதன் தன்னுடைய கவனத்துக்கு கொண்டு வந்திருந்தாகக் குறிப்பிட்டார்.
அதாவது, மாகாண சபையின் கடந்த பல கூட்டங்கள் கூச்சல், குழப்பங்கள் நிறைந்ததாகவும் மக்களால் விமர்சிக்கப்படும் சபையாகவும் பொழுது போக்கு சபையாகவும் வட மாகாண சபை காணப்படுவதாக, வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டிருப்பதாகவும் மேலும் சபையில் பிரேரணைகைளக் கொண்டு வருவதற்கும் தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அவ்வாறு பிரேரணைகளைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதனூடாக, எதுவும் நடக்கப் போவதில்லை என்றும் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சபையின் ஓர் உறுப்பினருக்கு கருத்துக் கூறுகின்ற சுதந்திரமும் உரிமையும் இருக்கிறதெனவும் அதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாதெனவும் குறிப்பிட்ட அவைத் தலைவர், இங்கு அனந்தி சசிதரன் கூறிய கருத்துகளில் மிகவும் பாரதூரமான பல விடயங்கள் இருக்கின்றனவெனவும் தெரிவித்தார்.
அவரது இந்த உரைகள் தொடர்பில், தான் முதலமைச்சருக்கும் தெரியப்படுத்தியிருப்பதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025