Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் களியாட்ட நிகழ்வுக்கான நுழைவுச் சீட்டில், யாழ்ப்பாணம் மாநகர சபை அனுமதிப் பெறப்படாதச் சீட்டுகளை, மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், நேற்று (11) இரவு கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் - முத்திரைச் சந்திக்கு அருகில் உள்ள சங்கிலியன் (கிட்டு) பூங்காவில், களியாட்ட (கார்னிவெல்) நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அந்த நிகழ்வுக்காக விற்பனைச் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டில், யாழ்ப்பாணம் மாநகர சபையின் உத்தியோக முத்திரைப் பொறிக்கப்பட்டி -ருக்கவில்லை.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்களான கிருபாகரன் மற்றும் ரஜீவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்குச் சென்ற அவர்கள், நுழைவுச் சீட்டுகளில் மாநகர சபை முத்திரை பொறிக்கப்படாத நுழைவுச் சீட்டுகளைக் கைப்பற்றினர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட நுழைவுச் சீட்டுகளை, மேலதிக நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் மாநகர சபை வருமான வரிப் பகுதியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago