2025 மே 10, சனிக்கிழமை

’அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்’

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

நாங்கள் இலங்கையர் என்ற  அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென, யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார்.

நேற்றைய தினம், யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முதல்வரை  சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், தான் பதவியேற்ற பின்னர் நேற்றைய தினம் முதன்முதலாக இந்து மத குருவை  சந்தித்திருக்கின்றேன். சந்திப்பில் மிகவும் ஆக்கபூர்வமானதாக  பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றேனென்றார்.

“இராணுவத்தினர் ஆகிய எமது பிரதான நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நல்லிணக்கத்தை ஏற்படுத்துதலாகும். இந்த அரசாங்கமானது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் திட்டங்கள் மற்றும் பல்வேறு முன்மொழிவுகளை மக்கள் சார்ந்து மேற்கொள்ள இருக்கின்றார்கள்.

“இராணுவமானது எப்போது அதாவது குறிப்பாக யாழ். மாவட்ட கட்டளை தலைமையகமானது வடக்கு மக்களுக்கு உதவி செய்வதற்கும் இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தும்.

“அத்தோடு, எமது பிரதேசத்தில் சமாதானம் முக்கியமானது இலங்கையர் அனைவரும் ஒரு நாட்டவர்கள் தான் என்ற கொள்கைக்கு இணங்க நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வசித்து வருகிறோம்.  இங்கே இரண்டு நாடுமில்லை,  இரண்டு  நிர்வாகமும் இல்லை, இரண்டு இராணுவ கட்டமைப்பு  என்ற கதைக்கும் இடமுமில்லை. நாம் அனைவரும் இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். இங்கே பிரிவினை என்ற வார்த்தைக்கு இடமில்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X