Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Freelancer / 2022 ஒக்டோபர் 14 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை வழிப்பறி கொள்ளையர்கள் வீதியில் மறித்து கத்தி முனையில் அவரிடம் கொள்ளையடித்துள்ளனர்.
அபிவிருத்தி உத்தியோகஸ்தரான குறித்த பெண் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை பிரதேச செயலக பணி முடித்து தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, வீதியில் நின்ற வழிப்பறி கொள்ளையர்கள், குறித்த பெண்ணை மறித்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த நகையையும் கைப்பையையும் அபகரித்து சென்றுள்ளனர்.
கைப்பையினுள் ஒரு தொகை பணம், ஆவணங்கள் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பன காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
2 hours ago
2 hours ago