Freelancer / 2022 ஜூன் 30 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை 35 வது ஆண்டாக நடாத்தும் 'மாபெரும் பேரவை தமிழ் விழாவில்' பங்கேற்பதற்காக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று வியாழக்கிழமை அமெரிக்கா பயணமானார்.
நாளை 1ஆம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் இந்நிகழ்வு நடை பெறவுள்ளது.
இந்த பயணத்தில் அமெரிக்க அரசின் இராஜாங்க திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுடன் 'தமிழர் தரப்பு நிலைப்பாடு' தொடர்பாக கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு அமெரிக்க வாழ் தமிழ் அமைப்புகள் பலரோடும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் குறித்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago