2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் கைதிகள் ஒற்றுமையாகச் செயற்படவேண்டும்

Princiya Dixci   / 2015 நவம்பர் 09 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

விடுவிக்கப்படவுள்ள அரசியல் கைதிகள், தங்களுடன் மற்றைய கைதிகளும் சேர்த்து விடுவிக்கப்படவேண்டும் என்பதில் ஒற்றுமையாக செயற்பட்டு அனைவரும் ஒருமித்து விடுதலை செய்யப்படுவதற்கு பாடுபடவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

காங்கேசன்துறை வீதி நாச்சிமார் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்;ப்பாண அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

'கட்டம் கட்டமாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. முதற்கட்டமாக 28 பேர், இரண்டாம் கட்டமாக 30 பேர், மூன்றாம் கட்டமாக 40 எனக்கூறுகின்றனர். அவ்வாறென்றால் மிகுதிப் பேர் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்பது தெரிகின்றது. அவர்களை குற்றவாளிகளாக்கப் பார்க்கின்றனர்' என்றார்.

மேலும், 'ஒன்றாக பழகியவர்களில் ஒருவர் விடுதலை ஆகியதும், மற்றவர் அதனை நினைத்து மனம் வருந்தும் நிலையும் ஏற்படும். இதனால் பல விளைவுகள் ஏற்படும். எனவே, கைதிகள் ஒற்றுமையாக செயற்படவேண்டும். தங்கள் குடும்பங்களின் நிலையை காரணங்காட்டி கைதிகள் தங்கள் ஒற்றுமையை குலைக்கக்கூடாது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .