2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி’

Princiya Dixci   / 2021 மார்ச் 07 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ் 

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப யாழ். மாநகர சபையைக் கலைத்து அரசாங்கத்துக்குச் சார்பாக இந்த மாநகர சபையைப் பொறுப்பேற்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்பட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் எனத் திரிந்தவர்கள்.

அதேபோல், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்ஷவை வெல்ல வைப்பதற்காக பல பிரயத்தனங்களைச் செய்தவர்கள்.

தற்போது மாநகர சபையைக் கலைப்பதற்காக மஹிந்த குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவர்களின் கைக்கூலியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சிலர் செயற்படுகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .