Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் கரிசனை காட்டாவிடின், அந்த மக்கள் அரசாங்கத்துக்கு எதிராகவோ அல்லது ஜனாதிபதிக்கு எதிராகவோ கறுப்புக் கொடிப் போராட்டங்களை முன்னெடுப்பதில் எந்த பிழையும் இல்லையென, வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில், நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துக் கருத்துத் தெரிவித்த அவர்,
வடமராட்சிக் கிழக்கில், தென்னிலங்கை மீனவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மக்கள் போராட்டங்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் மழுங்கடித்ததாகக் கூறுப்படும் கருத்துகள் அப்பட்டமான பொய்யென, அவர் தெரிவித்தார்.
நாங்கள் மக்கள் போராட்டங்களை மழுங்கடித்தோம் என்றால், அதற்காகப் பகிரங்க விவாதத்துக்கு தாங்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்ததுடன் அதற்கு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் வரத் தயாராவெனவும் கேள்வியெழுப்பினார்.
இதேவேளை, நாயாறு பகுதியில், மீன்வாடிகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்களெனத் தெரிவித்த அவர், இது குறித்து அரசாங்கம் எந்தவிதமான கரிசணையும் காட்டவில்லையெனவும் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக அல்லது ஜனாதிபதிக்கு எதிராக சாத்வீக வழியில் எதிர்ப்புப் போராட்டங்களையோ அல்லது கறுப்புக் கொடிப் போராட்டங்களையோ முன்னெடுப்பதில் எந்த பிழையும் இல்லையென, அவர் மேலும் கூறினார்
9 hours ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025