2025 மே 15, வியாழக்கிழமை

’அரசாங்கத்தை தொடர்ந்தும் நம்பிக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

நாங்கள் மத்திய அரசாங்கத்தை தொடர்ந்தும் நம்பிக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

கோண்டாவில் ஞான வீர சனசமூக நிலையம் நடத்தும் முன்பள்ளி பரிசளிப்பு தினவிழா, இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “தற்போதுள்ள அமைச்சின் செயலாளர்கள் யார் என்பது உண்மையாக தெரியாது இல்லை. எங்களுக்கு காணப்படுகின்றது நாங்கள் வழங்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலை காணப்படுகின்றது.

“எமது நாட்டில் சுகாதாரத்துக்கு வழங்கல் இருக்கின்றதா, விளையாட்டு இருக்கின்றதா, இல்லை. அங்கே நாங்கள் மத்திய அரசாங்கத்தை நம்பிக் கொண்டிருக்கின்றோம். இன்றும் அந்த நிலைதான் தொடர்கின்றது.

“ 13ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துமாறு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இந்தியாவில் கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருக்கும் போது, இந்த விடயம் பேசப்பட்டது.

விமானம் எடுத்து புறப்படவில்லை அதற்குள் ஒரு செய்தி வந்துவிட்டது தான் அப்படிச் சொல்லவில்லை என்று. முதல் செய்தி வருகின்றது 13 பிளஸ் பிளஸ் பெறுவதாக. பின்னர் அந்த செய்தி வருகின்றது அந்தக் கதையில் உண்மை இல்லை என்று. அங்கே அவர்கள் சொல்லி இருக்கின்றார்கள் சொல்லும்போது கேட்க வேண்டியது ஒரு தலைவரின் நியதி.

“நடைமுறைப்படுத்துவதா, இல்லையா என்பதனை முடிவு எடுத்தார்கள். தற்போது ஒரு வெற்றிடத்தில் தமிழர்கள் நிற்கின்றோம். ஆனால் எல்லாமே எங்கள் கையை விட்டுப் போயிருக்கும் நேரத்தில், ஒருவேளை சஜித் பிரேமதாஸ அவர்கள் வந்து இருந்தால் உங்களுக்கு ஒரு உற்சாகம் பிறந்து இருக்கும்.

“இன்று, அதுவும் இல்லாத நிலையில் என்ன நடக்கப் போகின்றது என்பது தொடர்பிலும் இவர்கள் எங்களை கூப்பிட்டு பேசவும் இல்லை எதுவும் சொல்லவும் இல்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .