2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் கைதிகள் விடுதலை: நீதி அமைச்சர் உறுதி

Freelancer   / 2022 ஒக்டோபர் 31 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அரசியல் கைதிகளின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (30) விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சரை, அரசியல் கைதிகளின் உறவினர்கள் சந்தித்தனர். 

அதன் போது, நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 34 அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு நீதி அமைச்சரிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். 

அதன் போதே அமைச்சர், அண்மையில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின்  வழக்கு நிலைமைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடி விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் என தெரிவித்தார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X