Janu / 2024 மே 30 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணப்படத்தினை பொது நூலக கேட்போர் கூடத்தில் திரையிட அனுமதி வழங்கும் போது, அரசியல் பேச கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவண படத்தினை கடந்த 17 வருட காலமாக நூலக கேட்போர் கூடத்தில் திரையிடுவதற்கான முயற்சிகளை பல தரப்பினரும் முன்னெடுத்து வந்த நிலையில் அது சாத்தியமாகவில்லை.
இந்நிலையில், யாழ்.சிவில் சமூக நிலையம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட முயற்சியில் , ஆவணப்படத்தினை திரையிட அனுமதி வழங்கிய மாநகர சபையினர் , நிகழ்வில் அரசியல் எதுவும் பேச கூடாது என்ற கடுமையான நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.
அதனால் ,நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் , நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்தில் , “#அனுமதிக்கப்படவில்லை #அரசியலை பேசுதல் ”என எழுதிய பதாகைகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
எம்.றொசாந்த்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .