2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அவைத் தலைவரை சாடிய சர்வேஸ்வரன்

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் உள்ளார்ந்த அரசியல் நோக்கத்தோடு செயற்படுவதாக, கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் இன்று (04) நடைபெற்றது.

இதன்போது, மாகாண நீர்க் கொள்கை தொடர்பிலான விவாதத்தின் போது, விவசாய அமைச்சர் க.சிவநேசன், மாகாண விவசாய அமைச்சு முன்வைத்த நீர்க் கொள்கைக்கு என்ன நடந்தது என்று, அவைத் தலைவரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த அவைத் தலைவர் சிவஞானம், மாகாணத்துக்கு எத்தனை அமைச்சர், எத்தனை நீர்க் கொள்கைகளை முன்வைப்பீர்கள் எனக் கேள்வியெழுப்பினார்.

இதன் போது குறுக்கிட்ட கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், அமைச்சர்கள் எத்தனை கொள்கையையும் கொண்டு வரலாமெனத் தெரிவித்தார்.

மேலும், அமைச்சு கொண்டு வந்த கொள்கைக்கு என்ன நடந்தது. ஏன் அதனைக் கொடுக்கவில்லை என்று அவைத் தலைவரிடம் கேள்வியெழுப்பினார்.

அத்துடன், அவைத் தலைவர் அரசியல் உள்ளார்ந்த நோக்கத்தோடு செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X