Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாணத்திலுள்ள கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உறுதியளித்துள்ளார்.
இதற்கமைய, யுத்தம் காரணமாக வடபுலத்தில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்று வாழும் தமிழ் அகதிக் குடும்பங்களில் இருந்து பல்கலைக்கழகங்கள் சென்று பட்டங்களைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களை இலங்கைக்கு வரவழைத்து, கற்பிப்பதற்கான இரு நாடுகளுக்கிடையிலான சந்திப்பை ஏற்படுத்தவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
லண்டனுக்கு விஜயம் செய்துள்ள வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கும் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மனிதமாபிமான தொண்டுப் பணியாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு, லண்டன், யூஸ்டன் ரவி சங்கர் ஹோட்டலில், நேற்று (08) நடைபெற்றது.
இந்த விசேட சந்திப்பில், சிவன் அறக்கட்டளையின் நிறுவனத்தின் இயக்குநர் கணேஷவரன் வேலாயுதம், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்று லண்டன் வாழ் மனிதாபிமானத் தொண்டுப் பணியாளர் கலாநிதி சர்வேஸ்வரன், கலாநிதி மயூரன், சிறிகரன் (சுதன்) உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்போது, வடபுலத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்தது தொடர்பாகவும் கல்வி, விவசாயம், ஆழ் கடல் மீன்பிடி உள்ளிட்ட விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டன.
இதில் கலந்துகொண்ட சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குநர் கணேஸ்வரன் வேலாயுதம் கருத்துத் தெரிவிக்கையில்,
வன்னி மாவட்டத்தில், கணிதம் விஞ்ஞானம், ஆங்கிலப் பாடநெறிகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் உயர்தரத்தில் மாணவர்கள் கலை, வர்த்தகப் பிரிவுகளையே தெரிவு செய்து கற்று வருகிறார்கள் என்றும் கணித, விஞ்ஞானப் பிரிவுகளுக்கு திறமை வாய்ந்த ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக அவ்விரு துறைகளையும் தெரிவு செய்வதில் மாணவர்கள் பின்நிற்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், ஆங்கிலக் கல்வி தொடர்பிலும் ஆசிரிய பற்றாக்கறை தொடர்ந்தும் நிலவி வருவதாகவும் அவற்றையும் நிவர்த்தி செய்வது தொடர்பாக ஆளுநரிடம் முக்கியமான கோரிக்கையாக முன்வைத்தனர்.
இதனையடுத்து, இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் பட்டதாரிகளை வரவழைத்து, அவர்களை நியமிக்க முடியுமெனக் கருத்துகள் பரிமாறப்பட்டன.
அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், நாடு திரும்பியதும் அதிகாரபூர்வமாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
2 hours ago
4 hours ago