2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஆமைகளை இறைச்சியாக்க முற்பட்டவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், என்.ராஜ்

கொழும்புத்துறை - வலம்புர பகுதியில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 5 கடல் ஆமைகளை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீன்பிடி பரிசோதகருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இறைச்சிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஐந்து கடல் ஆமைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X