Editorial / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வயாவிளான் குட்டியப்புலம் பகுதியில் உள்ள, ஆலயம் ஒன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கைப் பணம் திருட்டு போயுள்ளதாக, ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (20), இடம்பெற்றிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில், ஆலய நிர்வாகத்தினால், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இதற்கு முன்னரும் கூட, அபிராமி அம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருட்டு போயிருந்தமை தொடர்பில், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், இருப்பினும், அது தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
11 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago