Editorial / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்., வடமராட்சி கிழக்கு, ஆழியவளையில், பெண் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில், ஒருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில், தனது மகனைப் பார்ப்பதற்காக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று வந்த நிலையில் குறித்த பெண், தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட் நிலையில், அவருக்கு திடீரென ஏற்பட்ட சுவாச கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர், யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இவர், பொலிஸ் மற்றும் இராணுவக் கண்காணிப்பில் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டு, ஐந்து நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே, இவ்வாறு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago