Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 25 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள் இன்றைய தினமும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவரென தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து நடத்துனர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் நேற்று பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்ட நிலையில் இதுவரை தாக்குதலை நடாத்தியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு உள்ளே வெளி இடங்களிலிருக்குது வருகின்ற பேருந்துகள் உள்நுழையாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், யாழ். சாலையின் செயற்பாடுகள் முடங்கி காணப்படுவதால் வெளியூரில் இருந்து வரும் பேரூந்துகள் தரித்து நின்று பயணிகளை ஏற்றும் செயற்பாடுகள் முடங்கி காணப்படுகின்றது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .