2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இணுவிலில் மௌனப் போராட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை, கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இணுவிலில், இன்று (22) காலை மௌன ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டதுடன், மௌனப் போராட்டமொன்றும் இடம்பெற்றது.

முன்னதாக, இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு முன்னால், இன்றுக் காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய மௌன ஊர்வலம், உடுவில் பிரதேசச் செயலக அலுவலம் வரை சென்றது.

தொடர்ந்து அங்கு மௌனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் உடுவில் பிரதேசச் செயலாளரிடம் ஆர்ப்பாட்டக்காரர்களால் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

இணுவில் கிராமம் பாரம்பரியமும் தொன்மையும் மிக்க கிராமம் ஆகும். இந்நிலையில், அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது, இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைத்து தொன்மை மிகு இணுவில் துண்டுபோடும் கைங்கரியம், இணுவிலில் உள்ள சில புத்திஜிவிகளால் திரைமறைவில் செயற்பட்டுவருவதாக, இணுவில் கிராம மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பில் ஆராயும் முகமாகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் ஒன்றுகூடலொன்று, இணுவில் சிவகாமி அம்மன் மண்டபத்தில், நேற்று  (21) நடைபெற்றது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலேயே, இந்தப் போராட்டமும் ஊர்வலமும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X