2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

’இந்திய படகுகளை இரணைதீவு மீனவர்களுக்கு வழங்க தீர்மானம்’

Niroshini   / 2021 டிசெம்பர் 26 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செந்தூரன் பிரதீபன்

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை இரணைதீவு பகுதி மீனவர்களுக்கு ஒரு படகினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நேற்று (25) மாலை, மயிலிட்டி துறைமுகத்துக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.  

இதன்போது, மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்ட அமைச்சர், எதிர்காலத்தில் மயிலிட்டி துறைமுகத்தில் இரண்டாம் கட்ட  பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் அறிந்துகொண்டார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை இரணைதீவு பகுதி மீனவர்களுக்கு ஒரு படகினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

அந்தப் படகுகள் தற்பொழுது மயிலிட்டித்துறை முகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த படகுகள் அரச உடமை ஆக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், அழுத்தங்கள் தெரிவித்தாலும் நாங்கள் இந்திய மீன்பிடி படகுகளை விடுவிக்கமாட்டோம் எனவும், அமைச்சர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X