2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் எழுவர் கைது மலேரியா பரிசோதனையும் செய்யப்பட்டது

Editorial   / 2018 ஜூலை 24 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.விஜித்தா, கபிலன் செல்வநாயகம்

 

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 7 பேரை,  இரண்டு நாட்டுப் படகுகளுடன், காங்கேசன்துறை கடற்படையினர், நேற்று (23) இரவு கைது செய்துள்ளனர்.

அத்துடன்இ குறித்த மீனவர்களிடம் இருந்து, தடை செய்யப்பட்ட இரண்டு தொகுதித் தங்கூசி வலைகளும் கைபெற்றப்பட்டுள்ளதாக, நீரியல் வளத்துறையின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

காங்கேசன்துறைக்கு வடமேற்கே உள்ள இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைந்தே, மேற்படி மீனவர்கள், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, இரவுநேரச் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், இவர்களைக் கைது செய்ததாகத் தெரிவித்த உதவிப் பணிப்பாளர், கைதான மீனவர்களிடம் மலேரியா பரிசோதணை மேற்கொள்ளப்பட்ட பின்னர், தாம் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .