Freelancer / 2023 ஜனவரி 10 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு, யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டு வருகின்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக, நேற்று (09) யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது, அரசுடனான பேச்சுவார்த்தையின் போது சமஷ்டி அடிப்படையிலான தீர்வை, தமிழ் தரப்புகள் ஒருமித்து வலியுறுத்த வேண்டுமென கோரி, நாவற்குழியில் வியாழக்கிழமை (05) முதல் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்து வெளியிடும் போது தெரிவித்ததாவது; தமிழ் மக்கள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வான சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு, அனைத்து தமிழ் தரப்புகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதால், அத்தகைய ஒற்றுமைக்கு உதவ வேண்டுமென தூதுவரிடம் வலியுறுத்தியதாகவும் அரசாங்கத்துக்கும் தமிழர் தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டுமெனவும் தூதுவரிடம் வலியுறுத்தியதாகவும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago