Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கொலை மிரட்டல் விடுத்தக் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முதலாவது சந்தேகநபராக இருந்து, ரயலட்பார் நீதிமன்றால் நிரபராதி என விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாரை, எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் நீதவான் ஏ.எம்.எம். றியாழ், இன்று (25) உத்தரவிட்டார்.
மேலும், இவ்வழக்கு கோவைகள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டமா அதிபருக்கு நினைவூட்டல் கடிதமொன்றை அனுப்புவதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர், மாணவி படுகொலை வழக்கில் சந்தேகநபராக தடுத்து வைக்கப்பட்டிருந்த கால பகுதியில், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுத்தார் என்றக் குற்றச்சாட்டிலேயே, குறித்த நபர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
26 minute ago
35 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
26 minute ago
35 minute ago
51 minute ago