2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இந்துக் கல்லூரி சாரணர் சின்னம் சூட்டல்

Freelancer   / 2023 மார்ச் 27 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

யாழ். இந்து திரிசாரணர் குழுவின் 6 சாரணர்களுக்கான திரிசாரணர் சத்தியப் பிரமாண நிகழ்வுடன் கூடிய சின்னம் தரித்தல் நிகழ்வு, யாழ். இந்துக் கல்லூரியில்  நேற்று (26) நபெற்றது.

திரிசாரணர் குழுவானது, பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்தவர்களுக்கான சாரணர் சேவையை 26 வயது வரை தொடர்வதற்கான கட்டமைப்பாகும்.  

இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களான வைத்தீஸ்வரன், கோகுலரமணன், சிவசங்கர், நிமல், டினுசாந்தன் மற்றும் கோபிராம் ஆகிய சாரணர்கள், திரிசாரணர்களாக உறுதியேற்பு எடுத்துக்கொண்டனர்.

யாழ். மாவட்ட முன்னாள் சாரண ஆணையாளர் செ.தேவரஞ்சன், யாழ். மாவட்ட சாரண உதவி மாவட்ட ஆணையாளர்களான கோ.சத்தியன் மற்றும் துற்ஜெயந்தன், சாரணர் தலமைசெயலக உதவி ஆணையாளர் அமல்ராஜ், யாழ். இந்துக் கல்லூரி சாரண ஆசிரியர் நிதர்சன், யாழ். இந்து திரிசாரண ஆசிரியர் சுஜீவன் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். 

யாழ். இந்து திரிசாரணர் குழுவானது 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய சாரணர்களுக்கான திரிசாரணர் குழுவாக ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .