Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 21 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜிதா, எம்.றொசாந்த்
புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம மக்கள் தமக்கு இந்துமயானம் வேண்டும் என வலியுறுத்தி சுன்னாகம் பிரதேச சபைக்கு முன்பாக இன்று (21) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம மக்களில் ஒரு தொகுதியினர் தமக்கு மீண்டும் இந்துமயானம் வேண்டும் எனவும் ஏற்கனவே இருந்த மயானத்தினை புனரமைத்து தருவதாக சபையின் செயலர் வாக்குறுதி அளித்தும் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது,
எமது கிராமத்துக்கு என இந்து மயானம் இருந்தது. பின்னர் அப்பகுதியை அண்டிய சிலர் சுகாதாரத்துக்கு பாதிப்பு என கூறி அதனை எதிர்த்தனர். இதனால் மயானத்தில் பிரச்சினை தோன்றியது. அப்போது இந்த விடயத்தில் தலையிட்ட பிரதேச சபையின் செயலாளர் தாம் இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் மின்சாரத்தின் ஊடாக எரியூட்டும் வசதியினை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். எனினும் நீண்டகாலமாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனாலேயே நாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
போராட்ட இடத்துக்கு வந்த பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன் போராட்டத்தில் ஈடுபடவர்களுடன் சமரசத்தில் ஈடுபட்டார். இந்து மாயனம் தொடர்பான விடயம் எமது சபையின் அமர்வில் பேசப்படவுள்ளது.
எனவே சபையில் பேசி ஓர் முடிவு எடுக்கப்பட்டதும் உங்கள் மயான அமைப்பின் பிரதிநிதிகளுடன் நாம் கலந்துரையாடுவோம் என உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 May 2025