Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பொலிஸ் அதிகாரி ஒருவரின் அலைபேசியைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காங்கேசன்துறை இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாயை 25ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி புதன்கிழமை (09) உத்தரவிட்டார்.
எனினும் சிப்பாயைப் பிணையில் எடுப்பதற்கு எவரும் வருகை தராமையால் அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கை ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி அச்சுவேலிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த போக்குவரத்து பொலிஸார் ஒருவரின் அலைபேசி திருடப்பட்டது.
இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில், போக்குவரத்துப் பொலிஸார் முறைப்பாடு செய்தமைக்கமைய, அலைபேசி பாவனை செய்தமை தொடர்பான தகவல்கள் தேசிய தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் இருந்து பெறப்பட்டது.
தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட அலைபேசியை பாவனை செய்த இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து அலைபேசியும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago