2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இருவருக்கு அவைத்தலமை

Niroshini   / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.நிதர்ஸன்

வடமாகாண சபை அவைத தலைவர் மற்றும் பிரதி அவைத் தலைவர் ஆகியோர் சபையில் இல்லாத நிலையில், மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர், சபைக்குத் தலைமை தாங்கலாம் என, வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் அமர்வு, இன்று (06) இடம்பெற்றது. இதன்போது, வடமாகாண சபை அவைத்தலைவர் மற்றும் பிரதி அவைத்தலைவர் சபையில் இல்லாத நிலையில், மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் சபையினை தலைமை தாங்கலாம் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டார்.

இதேவேளை கடந்த சபை அமர்வின் போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சுகயீனம் காரணமாக வருகை தரவில்லை. அத்துடன், பிரதி அவைத்தலைவரும் சபையில் இல்லாமையால் சபை ஆரம்பமாவதற்கு தாமதானமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .