2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இரகசிய தகவலால் சிக்கிய இருவர்

Freelancer   / 2022 ஏப்ரல் 16 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

கிளிநொச்சி பகுதியில் இருந்து மானிப்பாய் பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் முதிரை மரக் குற்றிகளை ஏற்றி வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். 

மிகவும் சூட்சுமமான முறையில் தேங்காய் குவியலுக்குள் மறைத்து வைக்கப்பட்டு பட்டா வாகனத்தில் இவை யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டு இருந்தன. 

சிவில் உடையில் திரியும் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வு பொலிஸார் இவர்களை கைதடி பகுதியில் வைத்து கைது செய்திருந்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட முதிரைக்குற்றிகளின் பெறுமதி 6 லட்சம் என தெரிவிக்கப்படுகிறது. எட்டு முதுரை குற்றிகளுடன் சந்தேகநபர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .