2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இரணைதீவில் புதைப்பதற்கு எதிர்ப்பு

Gavitha   / 2021 மார்ச் 07 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ், செ.கீதாஞ்சன்

கொரோனா வைரஸால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை, இரணைதீவில் அடக்கம் செய்வதற்காக எடுக்கப்பட்டத் தீர்மானத்தை, அரசாங்கம் கைவிடவேண்டும் என்று வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில், இன்று (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், மரியன்னை பேராலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

"கத்தோலிக்க மக்கள் வாழும், இரணைதீவில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் சடங்களை அடக்கம் செய்ய அரசு எடுத்த தீர்மானத்தை கைவிடவேண்டும். எமது எதிர்ப்பு முஸ்லிம் மக்களுக்கானது அல்ல. இஸ்லாமியரும் கத்தோலிக்கர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவேண்டும்" என்று யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் இதன்போது வலியுறுத்தினார்.

"எம் வாழ்விடத்தை சவக்காலை ஆக்காதே!, இரணைதீவு மக்களின் நல்வாழ்வை சிதைக்காதே!, மத நல்லிணக்கத்தை சிதைக்காதே!” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

இதேபோன்று, அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் வெவ்வேறு நேரங்களில் இவ்வாறான கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை, முல்லைத்தீவிலும் இன்று (07) எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. செல்வபுரம் புனித யூதாகோவில், முல்லைத்தீவு இராயாப்பர் தேவாலயங்களில் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .