2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இரத்தக் கண்ணீருக்கு பதில் கூறவேண்டும்

Niroshini   / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'எங்களின் உறவுகளைத் தேடி தினமும் நாங்கள் வடிக்கின்ற இரத்தக் கண்ணீருக்கு, இந்த அரசாங்கம் உரிய பதிலை வழங்கியே தீரவேண்டும்' என, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், 46ஆவது நாளாகவும், இன்று (06) முன்னெடுக்கப்பட்டது.

'எங்களின் உறவுகளை, எங்கள் கைகளால் இராணுவத்திடம் ஒப்படைத்து, இன்றுடன் எட்டு வருடங்;கள் ஆகிவிட்டன. அன்று தொடக்கம் இன்று வரைக்கும் எமது பிள்ளைகள் மற்றும் உறவுகளைத்தேடி, கண்ணருடன் அலைகின்றோம். அவர்கள் இருக்கின்;றார்களா? இல்லையா? அவர்களுக்கு என்ன நடந்தது என்று, ஏன் இதுவரை சொல்வதற்கு, இந்த அரசாங்கம் காலத்தை கடத்துகின்றது.

நாங்கள் எங்கள் உறவுகளைத் தேடி இன்று 46 நாட்களாக? போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களின் உறவுகளைத் தேடி, தினமும் வடிக்கின்ற கண்ணீர் சாதாரண கண்ணீரல்ல. இரத்தக்கண்ணீர். இதற்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும்' என, காணாமல் போனவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .