Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 மே 14 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
“முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எமது மக்கள் இம்முறையும் நினைவுகூர்வார்கள். அதில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சுக்கே இடமில்லை. நாம் நினைவேந்தலை அமைதியாக முன்னெடுக்கவே விரும்புகின்றோம். ஆனால், தடைகளை விதித்து குழப்பங்களை அரசாங்கம் ஏற்படுத்துகின்றது” என்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று(13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, மேற்படி அமைப்பின் உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இதன்போது தொடர்ந்துரைத்த அவர்கள், “மக்களை இரவில் நடமாட தடைவிதித்துவிட்டு, இரவோடு இரவாக முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவுத் தூபியை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். நடுகல்லை களவாடி எடுத்துச் சென்றுள்ளனர். நடுகல், களவாடப்பட்டமைக்கு படையினரும் அங்கு நின்றிருந்த பொலிஸாருமே பதிலளிக்க வேண்டும்.
“அவர்களுக்கு எதிராக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான வடக்கு, கிழக்கு பொது கட்டமைப்பு, நிச்சயமாக சட்டநடவடிக்கைகளை எடுக்கும்” என்றார்.
“ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர, நினைவுதூபி அமைக்க அனுமதித்துள்ள இலங்கை அரசாங்கம், மறுபுறம் இன அழிப்புக்குள்ளான எமது மக்களை நினைவுகூர அனுமதி மறுக்கின்றது. நினைவு தூபிகளை அடித்து நொருக்குகின்றது” என அவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025