Freelancer / 2022 ஒக்டோபர் 23 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாலி - வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துச் சென்ற இராணுவத்தில் பணியாற்றும் ஒருவர் பொதுமக்களினால் மடக்கிப் பிடித்து பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
15 வயதுச் சிறுமி தனியார் கல்வி நிலையத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தவர் சங்கிலியை அபகரித்து விட்டு சிறுமியை கீழே தள்ளிவிட்டுத் தப்பித்துள்ளார்.
காயமடைந்த சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், குறித்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் கொல்லங்கலட்டியை சேர்ந்தவரே இவ்வாறு மக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பலாலி பொலிஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் சங்கிலியும் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபரை பொலிஸார் அழைத்துச் சென்ற போது இராணுவத்தினர் தலையீடு செய்ததால் குழப்பநிலை ஏற்பட்டது. எனினும் மக்களின் எதிர்ப்பால் இராணுவத்தினரின் இடையூறு கைவிடப்பட்டது. (R)
53 minute ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
7 hours ago