2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம்

Niroshini   / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

கடமையின் போது போதையில் காணப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தொிவித்துள்ளனர்.

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களே, இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும், நேற்று (28) நண்பகல், கொடிகாமம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் பரிசோதனையில் அவ்விவரும் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குறித்த இருவரிடமும், சாவகச்சேரி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், குற்றம் உறுதியான நிலையில், குறித்த இருவரும் மறுஅறிவித்தல் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X