2025 மே 21, புதன்கிழமை

இறந்த எஜமானுக்கு காவலாக 5 நாட்களாக காவல் காத்த நாய்

Editorial   / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செந்தூரன் பிரதீபன்

வீட்டு எஜமான இறந்து ஐந்து நாட்கள் கடந்து துர்நாற்றம் வீசிய போதும் நன்றி உணர்வுள்ள செல்லப்பிராணியான நாய் இறந்த உடலுக்கு காவலாக இருந்துள்ள சம்பவம் அணைவரின் மனதினையும் வெகுவாக பாதித்துள்ளது. இச்சம்பவம் அணைஸ்வீதி பாண்டியன்தாழ்வு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கந்தையா இந்திரன் வயது(65) என்ற நபர் திருமணமாகி பிள்ளைகள் இன்றியே வாழ்ந்து வந்துள்ளார். ஏழு சகோதரர்களுடன் பிறந்த இவர் மட்டுமே தாயகத்தில் வாழ்ந்துள்ளார். மூன்று நேரமும் கடையில் உணவு எடுத்து உண்பதுடன் தான் உணவு வாங்கி வரும் போது செல்லமாக வளர்த்த தனது நாய்க்கும் ஒரு பார்சல் ஒன்றை எடுத்து வருவதனை வழமையாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் அசவர் வீட்டில் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதனை அறிந்த அயலவர், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் வீட்டுக்குள் வந்து பார்த்த போது அவர்களுக்கு ஒரு புறம் துர்நாற்ற வாடையுடன் அழுகிய நிலையில் சடலம் காணப்பட்டமை ஒரு புறம் இறந்த எஜமானுக்கு காவலாக நாய் ஐந்து நாட்களா காவல் காத்திருத்தமை நெகிழச்சியயை ஏற்படுத்தியுள்ளது.

சடலத்துக்கருகில் பொலிஸார் செல்வதற்கு கூட முடியாமல் எஜமானுக்கு நன்றி விசுவாசமாய் நாய் இருந்தமை அனைவரையும் நெழிச்சிபடுத்தியுள்ளது. தற்போதைய காலத்தில் பெற்றதாய் தந்தையை இல்லங்களில் சேர்க்கும் பிள்ளைகள் மத்தியில் பிள்ளைக்கு நிகராக வளர்த்த நாய் நன்றி உணர்வுடன் துர்நாற்றத்துக்கு மத்தியில் காவல் காத்தமை அணைவரையும் ஒரு கணம் சிந்திக்க வைத்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X