2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இறந்தவரின் பெயரில் உறுதி முடித்த சட்டத்தரணி உட்பட ஐவர் கைது

Editorial   / 2022 டிசெம்பர் 08 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் இறந்தவரின் பெயரில் உறுதி முடித்து, காணி விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சட்டத்தரணி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓட்டுமடம் பகுதியில் உள்ள 6 பரப்பு காணி ஒன்றின் உரிமையாளர் கடந்த 1988ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அந்த காணியை 2021ஆம் ஆண்டு உரிமையாளரால் ( உயிரிழந்தவர்) விற்கப்படுவது போன்று மோசடி ஆவணங்களை தயார் செய்து இ காணியை 15 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் உறுதி எழுதிய சட்டத்தரணி, சாட்சி கையொப்பம் இட்டவர்கள் என சம்பவத்துடன் தொடர்ப்புடைய ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதேவேளை சில வாரங்களுக்கு முன்னரும் உயிரிழந்தவரின் பெயரில் உறுதி முடித்து, காணி விற்பனை செய்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டு,இ விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X