Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 16 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
“உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து கட்சிகளிடையே பலத்த போட்டிகள் நிலவி வருகின்ற நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு குறித்தான இறுதி முடிவை ஜனாதிபதியே எடுப்பாரென” அக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற தேர்தல் முடிவுகளினடிப்படையில், உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதுக்கு, ஒரு கட்சிக்கு ஏனைய சில கட்சிகளின் ஆதரவு நிச்சயம் தேவை என்ற நிலை உருவாகியிருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு குறித்துக் கேட்ட போதே அங்கஐன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சபைகளில் ஆட்சியமைப்பதுக்கு எதிராக எங்களது கட்சி இருக்காது. ஆனால் தவறான செயற்பாடுகளுக்கு நாம் ஆதரவை வழங்குவோம் என்றும் யாரும் எதிர்பார்க்க முடியாது.
உள்ளுராட்சி மன்றங்களில் எங்களது கட்சியின் இறுதி முடிவை கட்சித் தலைவரான ஜனாதிபதியுடன் பேசியே எடுக்க முடியும். இதனடிப்படையில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை. ஆகவே உயர் மட்டத்துடன் பேசி விரைவில் எமது இறுதி முடிவை அறிவிப்போம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .