2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘இலங்கை வங்கி விருது’

Freelancer   / 2022 டிசெம்பர் 15 , பி.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தால் வழங்கப்படும் தொழில் நிர்வாகமாணி, வணிகமாணி ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளிலும் முதனிலை பெறும் மாணவர்களுக்கு, வருடாந்தப் பட்டமளிப்பு விழாவின் போது இலங்கை வங்கியால் ‘இலங்கை வங்கி விருது’ வழங்கப்படவுள்ளது.

இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (15) முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த உடன்படிக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும் இலங்கை வங்கியின் சார்பில் அதன் வட மாகாண உதவிப் பொது முகாமையாளர் வி. சிவானந்தனும் ஒப்பமிட்டனர்.

வருடாந்தம் தங்கப் பதக்கத்தையும் சான்றிதழையும் வழங்குவதற்கென இலங்கை வங்கியால் ரூபாய் பத்து இலட்சம் இலங்கை வங்கி, திருநெல்வேலி கிளையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெயரில் வைப்பிலிடப்பட்டு, விருதுக்கான வைப்புச் சான்றிதழ் பல்கலைக்கழக நிதியாளர் கே. சுரேஸ்குமாரிடம் கையளிக்கப்பட்டது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X