2025 மே 01, வியாழக்கிழமை

இலவச சிங்கள மொழி விண்ணப்பம் கோரல்

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 23 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி. விஜித்தா

இந்த பௌத்த கலாசார பேரவையால் இரண்டாம் மொழி சிங்களம் பயில்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இந்து பெளத்த பேரவையின் பொதுச் செயலாளர் தேசமானிய எம்.டி.எஸ். இராமச்சந்திரன் தெரிவித்தார்.

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் வார இறுதி நாட்களில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை இடம்பெறும்.

பயிற்சியானது ஆறு மாதங்கள் 120 மணித்தியாலங்கள் இடம்பெறவுள்ள நிலையில் தரம் 9 க்கும் மேற்பட்ட மாணவர்களும் அரச உத்தியோகத்தர்கள், தனியார் கல்வி நிறுவன மாணவர்கள் பங்குபற்ற முடியும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி, மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி, புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம், சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி, உடுத்துறை மகா வித்தியாலயம், யாழ் மத்திய கல்லூரி.

முல்லைத்தீவு மாவட்டத்தில், வித்தியானந்தா கல்லூரி, கல்யாண வேலர் அறநெறிப் பாடசாலை, விசுவமடு மகா வித்தியாலயம்.

கிளிநொச்சி மாவட்டத்தில், கார் போனியா கல்லூரி, மத்திய கல்லூரி, வினாசியோடை மகா வித்தியாலயம், தர்மபுரம் மகா வித்தியாலயம், முருகானந்தா கல்லூரி.

வவுனியா மாவட்டத்தில் நாத்தாண்டிக்குளம், பிரமண்டு மகா வித்தியாலயத்திலும், மன்னார் மாவட்டத்தில் வழமையாக இடம்பெறும் பாடசாலைகளில் இடம்பெறும்.

ஆகவே குறித்த சிங்கள மொழியை கற்க விரும்புவோர் பின்வரும் பாடசாலைகளில் தொடர்பு கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கு 0760282693 என்ற அலுவலக இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .