2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இளைஞனை வெட்டியவர்களில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 09 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

யாழ். பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சனிக்கிழமை (07) இரவு வாளால் வெட்டிய குற்றச்சாட்டில் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (08) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் உணவு உட்;கொண்டிருந்த இளைஞனை வெளியில் அழைத்த 04 பேரைக்; கொண்ட கும்பல், அவ்விளைஞனை வாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த இராசதுரை அருள்பிரசாத் (வயது 28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் இளைஞனின் பெற்றோர் முறைப்பாடு செய்தனர். தமது முறைப்பாட்டில் 04 பேரைக் கொண்ட இளைஞர் குழுவில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸார் ஒருவரும் அடங்குவதாகக் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரிடமும் இளைஞரின் பெற்றோர் முறைப்பாடு செய்தனர். இந்நிலையில, சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் மேற்படி சந்தேக நபரைக் கைதுசெய்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .