Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 03 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
தமிழரசு கட்சி சார்பில், நல்லூர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், இளைஞர் ஒருவருக்கு எதிராக மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்தே, குறித்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மிரட்டலுக்குள்ளான இளைஞன் கருத்துத் தெரிவிக்கையில்,
“குறித்த வேட்பாளரும் நானும் பாடசாலை நண்பர்கள். குறித்த வேட்பாளர் பாடசாலை காலத்தில் மாணவ அமைப்புகளில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்தபோது பல ஊழல்களைச் செய்திருந்தார்.
“அது தொடர்பில் நான் எனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன். அது தொடர்பாக குறித்த வேட்பாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், பொலிஸாரை எனது வீட்டுக்கு அழைத்து வந்து மிரட்டியுள்ளார்.
“நான் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருவதால், வீட்டாரிடம் என்னை தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு, கோப்பாய் பொலிஸார், எனது வீட்டாரிடம் தெரிவித்துச் சென்றுள்ளனர்.
“அவர்கள் வீட்டாரிடம் கொடுத்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தியபோது, பொலிஸார் குறித்த வேட்பாளர் தனக்கு எதிராக பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளதாகவும் ஆட்களை வைத்து தன்னை மிரட்டியதாவும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
“அவ்வேளை பொலிஸாரிடமிருந்து தொலைபேசியைப் பெற்ற குறித்த வேட்பாளர், ‘பயங்கரவாத தடைச் சட்டம் தற்போதும் அமுலில்தான் உள்ளது. அதனைப் பயன்படுத்தி என்னை தூக்குவேன்’ என மிரட்டினார்.
“அத்துடன், நான் வெளிநாட்டில் வசித்து வருவதால், தினமும் கோப்பாய் பொலிஸாருடன் வீட்டுக்குச் சென்று வீட்டாரை அச்சுறுத்தி வருகின்றார்” எனத் தெரிவித்தார்.
35 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago