2025 ஜூலை 02, புதன்கிழமை

‘இழுவைப் படகு தடைச் சட்டமூலம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை’

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

நாடாளுமனறத்தில் இழுவைப் படகுகளுக்கு தடைச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டும் இன்று வரை அதை அரசு  நடைமுறைப்படுத்தவில்லை என,  வடமராட்சி கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் நா.தர்மகுலசிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில், நெற்று நடைபெற்ற ஏடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், நாடாளுமன்றத்துக்கு  கொண்டுவரப்பட்டும் அது நிறைவேற்றப்பட வில்லை என்றால், அதனை கிழித்து குப்பைத் தொட்டியில் போடுங்கள்  எனவும் ஏனெனில், எங்கள் மக்கள் பிரதிநிதிகளும் இது தொடர்பாக வாய்திறப்பதாக  இல்லை எனவும், கூறினார்.

 நல்லாட்சி எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமும் நயவஞ்சக வேலைகளையே முன்னெடுத்து வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

இனியும் இவர்களை நாம் நம்பி ஏமாறதயாரில்லை. இனிவரும் நாடாளுமன்றத் தேர்தலில், யாழ். மாவட்ட அனைத்து கடற்றொழில் சமாசங்களும் இணைந்து சுயேட்சைக் குழு ஒன்றின் ஊடாக போட்டியிடவுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.

நா.வர்ணகுலசிங்கம்

இதேவேளை வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் நா.வர்ணகுலசிங்கம்,  யாழ்.குடாநாட்டு கடற்பகுதியில் வெளிமாவட்ட மீனவர்களால் மேற்கொள்ளப்படும் கடலட்டை தொழில், சுருக்குவலை தொழில் அடிமடி தொழில் ஆகியன நிறுத்தப்படாவிட்டால், ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து போராட்டம் நடாத்துவோமெனத் தெரிவித்தார்.

இனிமேலும் பொறுமையாக இருக்க முடியாது. வாழ்வோ சாவோ இரண்டில் ஒன்றை பார்ப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஆகையால் எமது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .