Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர்களின் பெருந்தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் மறைவு, உலகத் தமிழர்களையும் இந்திய தேசத்தையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளதெனக் குறிப்பிட்டுள்ள சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார், ஈழத் தமிழர்களுடைய விடுதலைப் பயணத்தில், கலைஞரின் கனவு நனவாகுமென்றுக் குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் கருணாநிதியின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே, மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் மட்டுமல்லாது, ஈழத் தமிழர்களுடைய அரசியல் உரிமைக்கான போராட்டத்திலும், கலைஞரின் பங்களிப்புகள் வரலாற்றுப் பதிவுக்குரியவை என்றுக் குறிப்பிட்டுள்ளதோடு, ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகாலம் வாழ்ந்த கலைஞரின் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
'எமது ஈழவிடுதலை அரசியலில், 1958 இலிருந்தே அக்கறையோடு செயற்பட்டுவந்த கலைஞர், எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு நேச சக்தியாகவே விளங்கினார். இலங்கையில், 1956 இல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, அதை எதிர்த்து, தி.மு.கவின் சிதம்பரம் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்த கலைஞர், 1983 இல், இலங்கையில் நடந்த இன வன்முறையைக் கண்டித்து, சட்டமன்றத்தில் பதவியைத் துறந்திருந்தார்.
'1983க்குப் பிறகு, ஈழப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்த வேளையில், தி.மு.கவும் கலைஞரும், இயக்கங்களுக்குப் பேருதவியாக இருந்தமை மறக்க முடியாதவை. 1986 இல் டெஸோ மாநாட்டை ஈழவிடுதலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்தியத் தலைவர்களின் பங்கேற்போடு மதுரையில் நடத்திஇ ஈழப் போராட்டத்தையும் இலங்கையின் இன ஒடுக்குமுறையையும், இந்திய அளவில் வலுவூட்டினார்.
'இப்படிப் பல்வேறு நிலைகளில் பெரும் பங்களித்த முதுபெரும் தமிழ்த் தலைவர் கலைஞர் கருணாநிதியின் இழப்பு, ஈழத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகவே அமைந்துள்ளது. கலைஞரின் இழப்பினால் துயரடைந்திருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தி.மு.கவினருக்கும், கலைஞரின் கோடி மக்களுக்கும், எங்கள் ஆறுதலையும் ஆழந்த கவலையையும் வெளிப்படுத்துகிறோம்' என, அந்த இரங்கல் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
54 minute ago
55 minute ago